close
Choose your channels

சூப்பர் ஸ்டார் படத்தை புரமோஷன் செய்த கமல்ஹாசன்

Thursday, September 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை வரும் ஞாயிறு அன்று முடிக்கவுள்ளதால் வெகுவிரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, 'தேவர் மகன் 2' மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது என அடுத்ததடுத்து சினிமாவிலும் அரசியலிலும் பிசியாக உள்ளார் கமல்ஹாசன்

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'சர்கார்' படத்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப்பச்சன், அமீர்கான் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'தக் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படம் வெளியாகவுள்ளதை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் லிங்கை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து அப்படத்திற்கு புரமோஷன் செய்துள்ளார். மேலும் இந்த படம் தமிழில் வெற்றி பெற அமிதாப், அமீர்கான் மற்றும் படக்குழுவினர்களுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.