close
Choose your channels

'பிக்பாஸ் 4' புதிய வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்

Saturday, September 5, 2020 • தமிழ் Comments

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று செய்திகள் கசிந்துள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடம் 53 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் கமலஹாசன் நடித்த ’சிங்காரவேலன்’ படத்தில் இடம்பெற்ற ’சொன்னபடி கேளு’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் ஒருசில காட்சிகளும் ஒரு சில நகைச்சுவை காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சொன்னபடி கேளு சொல்லுறது பாஸ், உங்கள் நான்’ என்றும் கமலஹாசன் இந்த டுவிட்டின் குறிப்பிட்டுள்ளார். மேலும் மூன்று வருடங்களாக பரிட்சயமான இந்த குரல் தற்போது உங்களுக்குள்ளே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது என்றும், ’தப்பு என்றால் தட்டி கேட்பேன் நல்லது என்றால் தட்டிக் கொடுப்பேன்’ என்றும் கமல் கூறியுள்ளார். விரைவில் பிக் பாஸ் என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz