கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் மற்றும் கேரக்டர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 29 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா மற்றும் டைட்டில் அறிவிப்பு விழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. இந்த விழா புதிய நடிகர் சங்கம் பொறுப்பேற்றவுடன் நடைபெறும் முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா நடத்துவதற்கான தொகையை கமல், பொருளாளர் கார்த்தியிடம் காசோலையாக வழங்கினார்.


பின்னர் இந்த படத்தின் டைட்டில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழ், மற்றும் தெலுங்கில் 'சபாஷ் நாயுடு' என்ற டைட்டிலும், இந்தியில் 'Sabaash Kundu' என்று டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டைட்டிலை இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தசாவதாரம்' பல்ராம் நாயுடு கேரக்டரில் கமல்ஹாசனும், அவருக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணனும், மகளாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ளனர். கமல்ஹாசன் உடன் பயணிக்கும் முக்கிய காமெடி கேரக்டரில் பிரம்மானந்தம் நடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன், ஊர்மிளா நடித்த 'சாணக்கியன்' என்ற மலையாள படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூன்று மொழி ஃபர்ஸ்ட்லுக்கையும் கமல் இன்றைய விழாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் '24' சென்சார் தகவல்கள்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்படும்...

முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி குறித்த முக்கிய தகவல்

துப்பாக்கி', 'கத்தி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'அகிரா' படத்தின் ரிலீஸ் தேதி வரும் செப்டம்பர் 23 என்பதை சமீபத்தில் பார்த்தோம்....

விஷாலின் 'கத்திச்சண்டை'யின் நாயகி

விஷால் நடித்து முடித்துள்ள 'மருது' மற்றும் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளிவரவுள்ள நிலையில்....

பழைய கேரக்டருக்கு மீண்டும் திரும்பும் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தின் தொடக்கவிழா நாளை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளதாகவும்....

சென்னை மாயாஜாலில் 'தெறி'யின் புதிய சாதனை

கடந்த தமிழப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை செய்து வரும் நிலையில் சென்னையில் மட்டும்....