ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இந்த பேட்டியில் ஒரு கேள்வியாக 'கடந்த காலங்களில் இயற்கை பேரிடர் நேரும் போதெல்லாம், திரையுலக பிரபலங்கள், அரசின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ரஜினிகாந்த், விஜய் போன்றோர் தங்களது ரசிகர் மன்றத்தின் மூலம் நேரிடையாக பொதுமக்களுக்கு நிவாரண உதவி செய்கின்றனர். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்வி கமலிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'சந்தேகம் வலுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. நாம் கொடுக்கும் பணம் தேவைப்பட்டோர்களுக்கு போய்ச்சேருமா? என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது. இந்த நேரத்திலாவது அரசியல்வாதிகள் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.