திரும்ப திரும்ப ஆதரவு கேட்க முடியாது: ரஜினி ஆதரவு குறித்து கமல்

தனது கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என நம்புவதாக கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இருப்பினும் கமலுக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் இதுவரை ரஜினி ஆதரவு தெரிவிக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்' என்று மட்டும் தனது ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தனது கட்சிக்கு யார் ஆதரித்தாலும் மகிழ்ச்சி என்றும், ரஜினி ஆதரித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்றும் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். என்னை ஆதரிப்பதாக ரஜினிதான் வெளிப்படுத்த வேண்டுமே தவிர, திரும்ப திரும்ப நான் கேட்கக்கூடாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,.

மேலும் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி கூறினார். ஆனால் இன்னும் அவர் வரவில்லை என்று கூறிய கமல்ஹாசன், ரஜினியை என் பாதி வாழ்க்கையில் தான் தெரியும், ஆனால் மக்களை 4 வயதில் இருந்து எனக்கு தெரியும் என்றும் மக்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள் அது போதும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 

More News

ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா? அதிகாரபூர்வ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தலைவர் 167' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது

8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடை: தீர்ப்பை கேட்டு விவசாயிகள் ஆனந்தக்கண்ணீர்

சென்னையில் இருந்து சேலம் வரை ரூ.10ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது.

ஒரு ரூபாயில் சானிடரி நாப்கின், நதிகள் இணைப்பு, ராமர் கோவில்: பாஜக தேர்தல் அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் சற்றுமுன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது

தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு 46 வருட சிறை தண்டனையும் மரண தண்டனை விதித்தது.

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.