புதிய கல்விக்கொள்கை: குஷ்புவை அடுத்து கமல் ஆதரவு

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த வைரமுத்து, குஷ்பு ஆகியோர் இந்த புதிய கல்வி கொள்கையை வரவேற்று தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்த உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, இதேபோன்று மருத்துவ துறைக்கும் நாட்டின் ஜிடிபியில் 7 முதல் 8 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

More News

சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள்

தமிழகம் வரை நீளுகிறதா கேரளத் தங்கக்கடத்தல் விவகாரம்!!! தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ!!!

கேரள அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பில் என்னென்ன புதிய தளர்வுகள்?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையுடன் அந்த ஊரடங்கு முடிவடைகிறது.

9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை: கொரோனாவை விரட்டி அடிக்கும் சென்னை

சென்னையில் கடந்த மாதம் வரை தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 1000 பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கை குறித்து வைரமுத்து, குஷ்பு கருத்து!

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.