close
Choose your channels

பாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்?

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கமல்ஹாசன் இதுகுறித்து விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட இலவசமாக வழங்கும் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏழைகள் நிலைமையை புரிந்து கொண்டதற்கு நன்றி. அடித்தட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சம் தான் நான் பிரதமருக்கு கடிதம் எழுத காரணம். இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் விமர்சனம் செய்யும் நேரத்தில் விமர்சனமும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதும் தான் ஒரு உண்மையான அரசியல்வாதிக்கு அழகு என்பதை கமல் நிரூபித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.