close
Choose your channels

இவர்கள் எல்லாம் இப்போது இல்லையே! 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘ஹேராம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து இன்று காலை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த 20 ஆண்டு கொண்டாட்டத்தை காண இந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் இல்லையே என்ற தனது வருத்தத்தை கமல்ஹாசன் சற்றுமுன் பகிர்ந்துள்ளார்.

‘ஹேராம்’ பட தயாரிப்பாளரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன் மற்றும் இந்த படத்தில் பணிபுரிந்த மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோஹன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, ஹெச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா போன்றவர்கள் இந்த இருபது ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என்று கமல்ஹாசன் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த ஷாருக்கான், ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஹேமாமாலினி போன்றவர்கள் இல்லாமல் இந்த படம் இல்லை என்றும், இந்த படத்தில் பணிபுரிந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.