கமல், விஜய் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்.. ரசிகர்கள் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ‘கலைஞன்’, விஜயகாந்த் நடித்த ’சேதுபதி ஐபிஎஸ்’ விஜய் நடித்த ’பிரியமானவளே’ ’பத்ரி’ உள்பட சுமார் 50 படங்களில் வில்லன் மற்றும் குணசேகர வேடங்களில் நடித்தவர் நடிகர் கசான் கான். தமிழ் மட்டுமின்றி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று திடீரென கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கசான் கான் மறைவை மலையாள திரைப்பட தயாரிப்பாளரான என்.எம். பாதுஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் கசான் கான் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

தனுஷின் D50 படத்தின் கதை இதுவா? ஒரே சென்டிமெண்ட் மழையா இருக்கும்போல..!

தனுஷ் நடித்து இயக்க உள்ள 'D50' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பதை பார்த்தோம். தனுஷின் 50வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை 'பா பாண்டி'

'லியோ' படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் - தயாரிப்பாளர் லலித்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பிய இந்தியா… 10 வருட வரலாற்றை கிளறும் நெட்டிசன்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி படுதோல்வி அடைந்திருக்கிறது.

திருமண விழாவில் செம்ம ஆட்டம் போட்ட யாஷ் - ரம்யா கிருஷ்ணன்.. வைரல் வீடியோ..!

சமீபத்தில் நிகழ்ந்த திருமண விழாவில் கேஜிஎப் புகழ் யாஷ் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'குக் வித் கோமாளி'யில் இருந்து நான் வெளியேற ஒரே ஒருவர் தான் காரணம்.. ஆண்ட்ரியன் எமோஷனல் பதிவு..!

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வார நிகழ்ச்சியில் எலிமினேஷன் போட்டியாளராக ஆண்ட்ரியன்