வாத்தியாருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,January 07 2017]

பிரபல இயக்குனர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி கே.பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை இன்று காலை முதல் நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் தெரிவித்து வந்தனர்

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன்னர் கே.பாக்யராஜூக்கு வாழ்த்து கூறியுள்ளார், 16 வயதினிலே முதல் வாத்தியாராக நீண்டகாலம் இருந்து வரும் கே.பாக்யராஜ், இந்த திரையுலகில் நீண்ட நெடுந்தூரம் புகழுடன் பயணம் செய்துள்ளார். அவருடைய பயணம் இன்னும் நெடுந்தூரம் நீடிக்க எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த '16 வயதினிலே' படத்தில் கே.பாக்யராஜ் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டுமின்றி கிராமத்து மருத்துவராகவும் நடித்திருப்பார். அதேபோல் கமலின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்திலும் சர்வர் வேடத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். மேலும் கமல்ஹாசன் நடித்த 'ஒரு கைதியின் டைரி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு கதை-வசனம் எழுதியவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கவுதம் மேனனின் 12th மேன் இவர்தான்.

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எதிர்பாராத காரணத்தால் டிராப் ஆனது

பெண்கள் ஆடை குறித்த போதனைகளை நிறுத்துங்கள். சித்தார்த் ஆவேசம்

கடந்த புத்தாண்டு தினத்தன்று நடந்த கொண்டாட்டத்தின்போது பெங்களூரில் பெண்கள் பாலியல் வன்முறை தாக்குதலுக்கு உட்பட்டது நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் புத்தாண்டு சம்பவம். முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டனர்.

கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...

பழம்பெரும் நடிகைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய உலக நாயகன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்...

பொங்கல் ரேசில் இருந்து விலகிய படத்திற்கு 'யூ' சான்றிதழ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.