கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'வுக்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Sunday,July 16 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒருவருடத்திற்கு மேல் ஆகியும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறாததால் இந்த படம் கைவிடப்பட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது.

இந்த நிலையில் 'கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதாகவும், 'சபாஷ் நாயுடு' திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் பல்வேறு காரணங்களால் இந்த படம் காலதாமதம் ஆனபோதிலும் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கப்படும் என்றும் கமல் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்த நிலையில் இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் கமல்ஹாசனுக்கு துணையாக இருந்தவருமான கெளதமி படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டபோது இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமலின் சகோதருமான சந்திரஹாசனும் அவருடைஅ மனைவியும், அடுத்தடுத்து ஒரு சிறிய இடைவெளியில் மரணம் அடைந்தனர்.

மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளால் 'சபாஷ் நாயுடு' காலதாமதம் ஆகிவந்தாலும் மிக விரைவில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு முன்பாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2' படம் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

More News

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு: விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் நோட்டீஸ்

சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு கூறி நோட்டீஸ் அனுப்புவது கடந்த சில காலமாகவே ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு மலையாள நடிகை விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நேற்று பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அபிராமி தியேட்டரில் புதிய முயற்சி: மற்ற திரையரங்குகளும் பின்பற்றுமா?

கடந்த 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி காரணமாக திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.150க்கும் மேல் உள்ளது.

நரமாமிச அகோரிகளால் தி.நகர் திருப்பதி கோவிலில் தீட்டா?

சென்னையின் திருப்பதி என்று அழைக்கப்படும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.

கதிராமங்கலம் மக்களுக்காக உயிரையே கொடுக்க துணிந்த டிராபிக் ராமசாமி

தஞ்சை அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.