close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ விழாவில் கமல்.. ரஜினியும் வருவாரா?

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மாதம் 29ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்தின்இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த மணிரத்னம் உள்ளிட்ட பல குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ள ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ரஜினியும் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 28ஆம் தேதி ’பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் முதல் மாதம் முதல் வாரத்தில் இருந்து பட குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை புரமோஷன் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.