கமல்ஹாசனின் டுவீட்டுக்கு என்ன அர்த்தம்: தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

கமல்ஹாசன் சாதாரணமாக டுவீட் போட்டாலே பல பேருக்கு புரியாது. அதிலும் அரசியல் குறித்து அவர் பேச ஆரம்பித்தவுடன் போடும் டுவீட்டுக்கள் பல புரிவதில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், 'Dr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன்.முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள்,குடியரசு புரிந்ததா?' என்று கூறியுள்ளார்.

இதில் டாக்டர் என்பது யாரை குறிக்கின்றது என்பது குறித்து அவரது ரசிகர்கள் பலவிதமாக விவாதித்து வருகின்றனர். ஒருசிலர் அன்புமணி என்றும் ஒருசிலர் தமிழிசை என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் கொஞ்சம் தெளிவாக இந்த டுவீட் அப்துல் கலாம் அவர்களை குறிப்பதாக குறிப்பிட்டுள்ளார். Dr. என்பது அப்துல் கலாமை குறிப்பிடுவதாகவும், அவர் முன்பு ,'முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை' என்று கூறியதாகவும், கமல் அதை வழிமொழிவதாகவும், அப்துல்கலாம் அவர்களை பின்பற்றுவது எந்த கட்சியின் தொண்டர் இல்லை என்றும் மக்கள் தான் என்றும் 'குடியரசு' என்பது அவர் முன்னாள் குடியரசு தலைவராக இருந்தவர் என்பதை குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கமல் யாரை மனதில் வைத்து இந்த டுவீட்டை பதிவு செய்தார் என்பது உறுதியாக தெரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.

More News

அஜித்துக்கும் விஜய்சேதுபதிக்கும் ஒரு வாரம் தான் வித்தியாசம்! எப்படி தெரியுமா?

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு முன்பே சுமார் 10 திரைப்படங்கள் அவசர அவசரமாக ரிலீஸ் ஆகின்றது...

முட்டை ஊழல் விவகாரம்: கமல் குற்றச்சாட்டுக்கு கலெக்டர் பதில்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள் வழங்கியதை கமல் நற்பணி மன்றத்தினர் தடுத்து நிறுத்தியதாக வெளிவந்த தகவல்களை சற்றுமுன் பார்த்தோம்.

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்

5 லட்சம் புத்தகங்களுக்கு மத்தியில் அஜித் சிலை: நெல்லை ரசிகர்கள் அசத்தல்

தல அஜித்துக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே.

கெடு முடிகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் அவசர ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்றாக செயல்பட்டு வருகிறது...