கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. கமல்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கூற நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த கமல், 'பாதிக்கப்பட்ட பசுதான் ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்க வேண்டும். கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாராவது பாதிக்கப்பட்டதாக கூறினால் அவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்' என்று கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சி 11 வருடங்களாக இந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்திலும் ஏற்கனவே ஒளிபரப்பாகியுள்ளது. புகார் கொடுத்தவர்களுக்கு இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது. வெறும் கலாச்சாரம் மட்டுமே தெரியும் என்பதால் தான் இந்த பிரச்சனை'என்று கூறினார். இருப்பினும் என் மீது புகார் கொடுத்தவர்களும் எனது ரசிகர்கள்தான் என்னை சிறையில் வைத்து அழகு பார்க்க நினைக்கும் ரசிகர்கள்' என்று கூறினார்.

More News

காயத்ரியின் சர்ச்சை 'வார்த்தை' குறித்து கமல் கூறியது என்ன?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும், தலைவியுமான காயத்ரி ரகுராம் நேற்று சர்ச்சைக்குரிய ஜாதியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்...

'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கியது எப்படி? திக் திக் நிமிடங்கள்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் திலீப், தனது சொந்த பகையை மனதில் வைத்து பிரபல நடிகை ஒருவரை கூலிப்படைகள் வைத்து பழிவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது