close
Choose your channels

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' குறித்த முக்கிய தகவல்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடினர். இதனையடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.