close
Choose your channels

டாப்ஸியை நேரடியாக வம்பிற்கு இழுக்கும் நடிகை கங்கனா? டிவிட்டரில் புது சர்ச்சை!

Monday, March 8, 2021 • தமிழ் Comments

தமிழ், இந்தி சினிமாக்களில் கவனம் பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் விவசாயிகளின் போரட்டத்தின் போது வெளிநாட்டு பிரபலங்களின் டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த, இந்திய பிரபலங்களைக் குறித்து கருத்து கூறி இருந்தார். இதையடுத்து நடிகை டாப்ஸி ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

இதையடுத்து நடிகை டாஸ்ஸி மற்றும் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் போன்றோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த வருமான வரிச்சோதனையானது தொழில் ரீதியாக நடத்தப்பட்டு இருந்தாலும் நடிகை டாப்ஸி மற்றும் அனுராக் ஆகியோர் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தக் காரணத்தினால்தான் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

இந்த வருமான வரிசோதனையை அடுத்து நடிகை டாப்ஸி தன்னுடைய ட்விட்டரில், நான் ரூ.5 கோடி பெற்றதற்கான ரசீதை தேடிக் கண்டுபிடித்து உள்ளார்கள். நான் அதை ப்ரேம் போட்டு மாட்ட உள்ளேன். மேலும் எனக்கு பாரிஸில் ஒரு வீடு இருக்கிறதாம். அந்த வீட்டின் சாவியைத் தேடினார்கள். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வருமான வரிசோதனையை எனக்கு நியாகப்படுத்தினார்கள்“ என்று கூறியிருந்தார்.

நடிகை டாப்ஸின் இந்த டிவிட்டரைப் பார்த்த பலரும் நடிகை டாப்ஸிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை டாப்ஸியின் டிவிட்டுக்கு நடிகை கங்கனா தன்னுடைய பதிலடியை கொடுத்து உள்ளா. அதில்,

“நீங்கள் மலிவானர்தான். நீங்கள் பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் பெண்ணியவாதி. உங்கள் எஜமானர் காஷ்யப் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013 இல் வருமான வரிச்சோதனை நடந்தது. அதிகாரிகள் உங்களிடம் நடந்த சோதனை அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். நீங்கள் குற்றமற்றவர்களாக இருந்தால் சோதனைக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்” என்று தெரிவித்து உள்ளார். நடிகை கங்கனாவின் இந்தக் கருத்தை ஒட்டி மீண்டும் டிவிட்டரில் சர்ச்சை வெடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz