close
Choose your channels

ரஜினியே பாராட்டிய 'தலைவி' திரைப்படத்தின் 3 நாள் வசூல் எப்படி?

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டிய ‘தலைவி’ திரைப்படத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாகும் சில சம்பவங்கள் திரித்து கூறப்பட்டதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் தமிழகத்தில் இந்த படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வட இந்தியாவில் இந்த படத்தை பிவிஆர் மற்றும், ஐநாக்ஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியிடவில்லை என்பதால் வசூல் பெருமளவில் பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் கடந்த வெள்ளியன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியான நிலையில் முதல் நாள் தமிழகத்தில் 80 லட்சமும், இந்தி பதிப்பில் 25 லட்சமும் பிற மாநிலங்களில் 1.25 கோடி என மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. மேலும் ‘தலைவி’ திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தம் 4.16 கோடி வசூல் செய்ததாகவும் இதனை அடுத்து எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் வெள்ளியன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.