close
Choose your channels

'என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும்: 'தலைவி' டிரைலர்

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அரவிந்தசாமி, கங்கனா ரனாவத் நடிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘தலைவி’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சுமர் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகள் உள்ளன. நடிகையாக இருக்கும் போது எம்ஜிஆர் உடன் நடித்தது, அதன்பின் எம்ஜிஆர் அரசியலுக்கு அழைத்தது, அரசியலுக்கு வந்த பின் அவருக்கு சொந்த கட்சியிலும் மாற்று கட்சியிலும் இருந்த எதிர்ப்பு, கொலை செய்ய நடந்த முயற்சி, சட்ட மன்றத்தில் நடந்த அவமதிப்பு, அதன்பின் முதல்வரானது உள்பட பல சம்பவங்கள் இந்த படத்தில் இருப்பது என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக டிரைலரின் முடிவில் ’என்னை அம்மாவா பாத்திங்கன்னா என் இதயத்தில் இடம் இருக்கும், என்னை வெறும் பொம்பளையா பார்த்தீங்கன்னா.... என்று கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கண்முன் திரையில் காட்டும் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் விஜய் எடுத்துள்ளார் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படம் ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.