'தலைவி' படத்திற்காக மீண்டும் களமிறங்கிய கங்கனா ரனாவத்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை விஜய் இயக்கி வருகிறார்.

’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் ’தலைவி’ படத்திற்காக கங்கனா களம் இறங்கி உள்ளார் என்பது இதிலிருந்து தெரிய வந்துள்ளது.

’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதற்காக கடைசி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை பட குழுவினர் இரவு பகலாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

More News

பும்ராவுடன் திருமணமா? அனுபமா பரமேஸ்வரன் தாயார் விளக்கம்!

பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் செய்திகள் கசிந்து வரும் நிலையில்

வாஷிங் “டன்“ சுந்தர் என எழுத முடியவில்லையே? சோகத்தோடு வைரலாகும் டிவிட்டர் பதிவு!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

செம சீன்: ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ வைரல்!

சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் செம சீன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதி!

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது.

வருமான வரிசோதனையால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இதுதான்: நடிகை டாப்ஸி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை டாப்ஸி என்பதும்,