ஜெயலலிதா கேரக்டருக்கு தேசிய விருது பெற்ற நடிகை!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு 'தலைவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான கங்கனா ரனவுட், 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் 'பாகுபலி' புகழ் விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார்.
சமீபத்தில் கங்கனா ரனவுட் நடித்த 'மணிகர்னிகா' திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு நடிகை 'தலைவி' படத்தில் நடிப்பது இந்த படத்திற்கு ஒரு பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments