close
Choose your channels

கங்கனாவுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்குமா?

Wednesday, April 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
குவீன் மற்றும் 'தானு வெட்ஸ் மானு' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மூன்றாவது முறையாக தேசிய விருதை பெறும் வாய்ப்பு விரைவில் அமையும் என பாலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது.

முக்கியத்துவமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் கங்கனா, தற்போது இந்தியாவின் வீரமங்கை என்று புகழப்பட்டு வரும் ஜான்சிராணி வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக வாள்சண்டை மற்றும் குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜான்சிராணி கேரக்டரில் நடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பு தன்னுடைய வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பரிசாக தான் கருதுவதாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு தேசிய விருதுகளை பெற்ற கங்கனாவுக்கு இந்த படத்திற்காக மீண்டும் தேசியவிருது கிடைக்கும் என்று பாலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
கங்கனா ரனாவத் ஜெயம் ரவி நடித்த 'தாம்தூம்' என்ற ஒரே தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.