இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'கங்குவா': பாலிவுட் நடிகருடன் சூர்யா மோதும் காட்சி..!

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இறுதி கட்டப்பட படிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் அவருடைய குழுவினர் கலந்துகொள்ளும் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இன்னும் ஒரு நாளில் சூர்யா கலந்து கொள்ள இருப்பதாகவும், சூர்யா மற்றும் பாபிதியோல் மோதும் இந்த படப்பிடிப்புடன் சூர்யாவின் காட்சிகள் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் விரைவில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

பெரியோர்களே.. தாய்மார்களே.. சினிமா ரசிகர்களே... கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது? மிகப்பெரிய மாற்றம் செய்த பிஎஸ் மித்ரன்..!

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து வசூல் செய்தது என்பது

விசித்ராவிடம் கேட்ட சாரி.. அர்ச்சனாவிடம் கொஞ்சல்: அம்மாவின் செயல் பார்த்து பூர்ணிமா அதிர்ச்சி

 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபேமிலி வருகை தரும் வாரம் என்பதால் சென்டிமென்டாக இருக்கும் என்பது மட்டுமின்றி வெளியில் நடக்கும் சில விவரங்களை போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது.

கலியுகத்துல போராடுகிற ஒவ்வொருத்தர் கூடயும் இருக்காரு: 'ஹனுமான்' டிரைலர்..!

பேராபத்திலிருந்து மனித குலத்தை காக்க நீ வந்தே ஆகவேண்டும் 'ஹனுமான்' என்று சாமியார் கோரிக்கை விடுத்தவுடன் மீண்டும் பூமிக்கு வரும் 'ஹனுமான்' செய்யும் மாயாஜாலங்கள் தான் இந்த படம்

பிக்பாஸ் வீட்டில் திடீரென பாசமழை, ஆனந்தக்கண்ணீர்: காரணம் இதுதான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் 75 நாட்கள் முடிந்த பின்னர் ஃபேமிலி வாரம் வரும் என்பதும்  போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சி அடைய செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.