ரொம்ப அசிங்கமாயிடும், கனி, பாபா பாஸ்கர் காரசாரமான மோதல்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான கனி மற்றும் பாபா பாஸ்கர் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இருவரும் மோதிக் கொண்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போதே கனி மற்றும் பாபா பாஸ்கர் இடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்படும் என்பது தெரிந்ததே. கனிக்கு காரக்குழம்பு கனி என்று பெயர் வைத்ததே பாபா பாஸ்கர் தான் என்பது தெரிவிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாபா பாஸ்கரிடம் கனி, ‘அசிங்கமாயிடும் போங்க’ என்று சொல்ல உடனே டென்ஷனான பாபா பாஸ்கர் ’என்ன அசிங்கம் ஆயிடும்’ என்று திருப்பி விவாதம் செய்தார்.

இந்த நிலை இந்த ப்ரோமோ காட்சியின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சி வரும் 25ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. உண்மையிலேயே இருவரும் மோதிக் கொண்டார்களா? அல்லது நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக இப்படி ஒரு புரமோ ஒளிபரப்பாகி உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

More News

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை: ஜோடியாக கலந்து கொள்ளும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

7 வருடங்களுக்கு முன்பே சோம்சேகர்-ஜூலி நண்பர்களா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலியும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம்சேகரும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்கள் என்ற தகவல் தற்போது அனைவருக்கும்

அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எதிராக டுவிட்...! சித்தார்த்துக்கு ஆதரவு தரும் நெட்டிசன்கள்...!

நீங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மக்களை விலை கொடுத்து கொலை செய்கிறீர்கள் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை டேக் செய்து டுவீட் போட்டுள்ளார் நடிகர் சித்தார்த். 

தடுப்பூசியை வீணாக்கியத்தில் இந்த மாநிலம் தான் முதலிடம்..!

கொரோனா தடுப்பூசியை வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.