close
Choose your channels

தாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments

இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நதியா, தனுஷ், விஷ்ணு விஷால், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் தந்தையுடன் மற்றும் மகன்கள், மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் இன்றைய சமூகவலைதளமே தந்தையர் தின ஸ்பெஷலாக மாறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள்களான கனி, விஜயலட்சுமி, நிரஞ்சனி ஆகிய மூவரும் தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும், லைக்ஸ் செய்தவர்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz