செருப்பால் அடித்து கொண்ட இரண்டு மனைவிகள்: தலைமறைவான பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

பிரபல கன்னட நடிகர் ஒருவரின் இரண்டு மனைவிகள் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்து கொண்டு தாக்கிய நிலையில் அந்த நடிகர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் துனியாவிஜய் என்பவருக்கு நாகரத்னா, கீர்த்திகவுடா ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல்மனைவி நாகரத்னா தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் கீர்த்தி கவுடா வீட்டிற்கு மகள்களுடன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இருவரும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் துனியா விஜய் திடீரென தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.