வளர்ப்பு தந்தையால் தொல்லை: இயக்குனரை திருமணம் செய்து எஸ்கேப் ஆன நடிகை!

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

வளர்ப்புத் தந்தை மற்றும் தாயாரால் சித்திரவதை அனுபவித்த நடிகை ஒருவர் தான் நடித்துக்கொண்டு இருந்த படத்தின் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரையுலகில் துணை நடிகையாக இருந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் துங்கபத்திரா என்னும் கன்னட படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கிய ஆஞ்சநேயா என்பவருடன் ஏற்பட்ட காதலை அடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் விஜயலட்சுமியின் தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனை அடுத்து குடும்பத்தின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறி இயக்குனர் ஆஞ்சநேயரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் விஜயலட்சுமியின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விஜயலட்சுமி ஒருசில தயாரிப்பாளர்களிடம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினர் முன் ஆஜரான விஜயலட்சுமி இந்த புகாருக்கு விளக்கம் அளித்து, அதன் பின்னர் பேட்டியில் கூறியதாவது:

என்னை யாரும் கடத்தவில்லை. நான் இயக்குனர் ஆஞ்சநேயரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். இந்த காதல் எனது தாயாருக்கும் வளர்ப்பு தந்தைக்கும் பிடிக்கவில்லை அதனால் என்மீது பொய்யான புகார் கூறியுள்ளனர். நான் வீட்டை விட்டு ஓடி வந்ததால் என்னுடைய பாட்டி விஷம் குடித்து இறந்ததாக கூறி உள்ளனர். ஆனால் அது உண்மையாக இருக்காது. நாடகம் ஆகத்தான் இருக்கும். எனது பாட்டி இறந்திருக்க மாட்டார்.

நான் எனது வளர்ப்பு தந்தையால் பலவித கொடுமைகளுக்கு உள்ளானேன். உடல் அளவிலும் மன அளவிலும் சித்திரவதைக்கு ஆளாகினேன். எனக்கு திருமணமாகிவிட்டது என்று தெரிந்ததும் என்னுடைய கணவரை எனது வளர்ப்புத் தந்தை கொலை செய்யத் திட்டம் தீட்டினார். அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக எனது கணவர் தப்பியுள்ளார். எனவே எங்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் கூறி இருக்கிறேன். எங்களை வாழவிடுங்கள் இனியும் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள். திருமணம் ஆனாலும் தொடர்ந்து நான் திரைப்படங்களில் நடிப்பேன் என்று நடிகை விஜயலட்சுமி பேட்டியில் கூறியுள்ளார்.

More News

'தர்பார்' படத்தின் வசனம் நீக்கம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் வெளியாகி தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று விறுவிறுப்பாக திரையில் ஓடி வருகிறது

விரைவில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வெடுப்பார்.. ரவிசாஸ்திரி.

தோனி,அவருடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை விரைவில் முடிக்கக்கூடும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நிஜ ஆதித்யா அருணாச்சலம் இவர்தானா? ஒரு சுவாரஸ்யமான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்' படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை

விஜய்யால் மட்டுமே இதெல்லாம் முடியும்: ஒரு எம்.எல்.ஏவின் ஆச்சரியம்

ஒருவர் இந்த அளவிற்கு பொது மக்களிடம் புகழ் பெற முடியுமென்றால் அது விஜய்யால் மட்டுமே முடியும் என எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நயன்தாராவை ஒரு மணி நேரம் அழவைத்தவர் யார் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.