நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர். அவ்வாறு வரும் இளம்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கினால் அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருவது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் விரேஷ். இவரிடம் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளார். அவருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்குவதாகக் கூறிய தயாரிப்பாளர் விரேஷ், கதை டிஸ்கஷ்னுக்காக தனது இடத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர் கதைகூறும் சாக்கில் அந்த பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயற்சிச் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விரேஷை அடித்து உதைத்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் விரேஷை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News

சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள்.

ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும்.

இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?

மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்.