close
Choose your channels

தனுஷிடம் நான் என்னையே பார்க்கின்றேன்: பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் பேட்டி!

Wednesday, October 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷிடம் நான் என்னையே பார்க்கிறேன் என பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தனுஷ் நடித்துவரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிவராஜ்குமாரின் பேட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பேட்டியில் சிவராஜ்குமார் கூறியபோது, ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் கதையை பெங்களூர் வந்து என்னிடம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறினார். அப்போது அவர் எனக்காக கூறிய கேரக்டர் மிகவும் பிடித்து விட்டது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அதுமட்டுமல்ல நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய எல்லாப்படங்களையும் நான் பார்த்து இருக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய குறும்புத்தனம், நண்பர்களிடம் அவர் நடந்து கொள்வதை எல்லாம் பார்க்கும் போது என்னையே நான் அவரிடம் பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தனுஷ் மீது எனக்கு எப்போதுமே ஒரு மரியாதை இருந்து வருகிறது என்றும் தற்போது அவருடன் நடிக்க வந்த வாய்ப்பை நான் தவற விட மாட்டேன் என்றும் இந்த படம் வெளியாகும் போது எனக்கும் தனுஷ்க்கும் உள்ள பிணைப்பை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’ என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.