close
Choose your channels

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' ரிலீஸ் குறித்த தகவல்

Monday, December 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் சிங்கிள் பாடலை இன்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்பது தெரிந்ததே

வைரமுத்துவின் வைரவரிகளில் 'எந்தன் கண்களை காணோம்' என்று தொடங்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் மெலடி பாடலை இன்று மாலை வரவேற்க உதயநிதியின் ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின், இந்த படத்தின் ரிலீஸ் வரும் பிப்ரவரி மாதம் என்று அறிவித்துள்ளார்.

உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி நடிப்பில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தில் ஜிவி பிரகாஷின் '100% காதல்' மற்றும் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.