'கண்ணப்பா' ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட முதலமைச்சர்.. இன்னும் 2 மாதங்கள் தான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’கண்ணப்பா’ என்ற படத்தின் குழுவினர் சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.
கண்ணப்பா கேரக்டரில் விஷ்ணு மஞ்சு, மகாதேவா சாஸ்திரி கேரக்டரில் மோகன் பாபு நடித்த ’கண்ணப்பா’ என்ற திரைப்படம் சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சரத்குமார், மது, கருணாஸ், பிரம்மானந்தம், உள்பட பலர் முக்கிய இடங்களில் நடித்துள்ள நிலையில், மோகன் லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழில் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபுதேவா ஆகியோர் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றனர். இதையடுத்து அவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருப்பதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Met one of my favorite Hero Sri. @myogiadityanath ji. He was gracious to launch the date announcement poster of #Kannappa. Gifted him a painting of Ramesh Gorijala. Such a Humble and powerful aura he has.
— Vishnu Manchu (@iVishnuManchu) April 9, 2025
Kannappa on June 27th. #HarHarMahadev pic.twitter.com/8zBF2nZ828
Mark your calendars! 📅 The legend of #Kannappa🏹 hits the big screen on 27th June! 🎥#HarHarMahadevॐ pic.twitter.com/d9TtzAJ1MI
— Vishnu Manchu (@iVishnuManchu) April 10, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com