close
Choose your channels

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா காம்போஸ் செய்து வைரமுத்து எழுதிய பாடல்கள் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.