close
Choose your channels

பேட்ட-விஸ்வாசம் படங்களுடன் இணையும் உதயநிதி-நயன்தாரா படங்கள்

Sunday, January 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும், 'தல' அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் கிட்டத்தட்ட சம அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் விறுவிறுப்பான முன்பதிவுகள் முடிந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி 'பேட்ட' ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் டிரைலர் திரையிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதேபோல் 'விஸ்வாசம்' படத்துடன் நயன்தாராவின் 'ஐரா' டீசர் திரையிடப்படும் என தெரிகிறது.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் டிரைலர் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும், 'ஐரா' டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.