100 கோடி பட்ஜெட், ஒரு வருடம் ஆராய்ச்சி.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தின் முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் இந்த படத்தின் கதையை படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காந்தாரா’. இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது என்பதும், வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியாகி 450 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 27ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’காந்தாரா’ முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய கதையம்சம் கொண்ட இந்த படம் கிபி 300 முதல் 400 வரையிலான காலகட்டத்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் கதைக்காக ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது குழுவினர் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆய்வு செய்து கதையை தயார் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

பான் - இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் என திட்டமிட்டுள்ளனர்.

More News

எதிர்பாராத ட்விஸ்ட்.. இந்த வாரம் எலிமினேஷன் இந்த போட்டியாளரா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' ரிலீஸ் தேதி இதுதான்.. நாளை ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் இந்த படம் டிஜிட்டலில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக

நாளை முதல் தளபதி விஜய் நூலகம்.. சென்னையில் திறக்கப்படும் 2 இடங்கள் இவைதான்..!

நாளை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் தளபதி விஜய்  நூலகம் திறக்கப்பட இருப்பதாகவும் சென்னையில் இரண்டு இடங்களில் தானே நூலகத்தை திறந்து வைக்க போவதாகவும்

'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்.. வைரலாகும் பதிவு..!

 ஹாலிவுட் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் 'தங்கலான்' படத்தின் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது.. வைரலாகும் கமல்ஹாசன் ஆடியோ..!

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது என்ற கமல்ஹாசன் ஆடியோவை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஆடியோ