கொரோனா நிதிக்காக கிரிக்கெட் போட்டி: யோசனை கூறிய அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோவை தடுக்க நிதி திரட்ட வேண்டும் என்றும், அதற்கு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் யோசனை கூறியுள்ளார். இந்த யோசனைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிரிக்கெட் போட்டி நடத்தி தான் நிதி திரட்ட வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்றும் பாகிஸ்தானுக்கு நிதி தேவை என்றால் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு பதிலாக எல்லையில் அத்துமீறல்களை நிறுத்தி அதில் மிச்சமாகும் பணத்தை வைத்து மருத்துவமனைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியா ஆன்மிக பூமி என்பதால் இங்கு ஏராளமான ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன என்றும் அவர்கள் அரசுக்கு உதவுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா விடுமுறையால் ஏற்படும் முக்கிய பாதிப்பு குறித்து கபில்தேவ் கூறியபோது, ‘பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பற்றி கவலைப்படுவதாகம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வி என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், கிரிக்கெட் போட்டிகளை விட பள்ளிகள் திறப்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். கபில்தேவின் இந்த கருத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பிரபல குணசித்திர நடிகரின் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் ரவி வல்லத்தோல் அவர்களின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார் 

ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் நடிகையின் ஆவேச டுவீட்

சமீபத்தில் ஜோதிகா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டபோது 'கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறார்கள். கோயில்களை பராமரிக்கிறீர்கள்.

சென்னை மக்கள் 4 நாளும் பிரியாணி சமைக்க போறாங்களா? பிரபல இயக்குனர் கேள்வி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3அம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவுக்குள் ஒரு ஊரடங்காக நாளை

கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை பிணவறை அருகே தூக்கி வீசிய பொதுமக்கள்

சளி இருமலுடன் இருந்த சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவரை மதுரையில் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிணவரை அருகே தூக்கி வீசி சென்ற கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனா நேரத்தில் ரமலான் நோன்பு: மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள மசூதிகள் பூட்டப்பட்டுள்ளன.