இவ்ளோ ஆக்ரோஷம் வேண்டாம்… கோலிக்கு அறிவுரை சொன்ன லெஜெண்ட் வீரர்!

டெஸ்ட் தொடர் போட்டிக்காக இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு அவசரம் காட்டக் கூடாது. இங்கிலாந்தில் நிதானமாகத்தான் விளையாட வேண்டும். ஆதிக்கம் செலுத்துவதற்கான நேரத்திற்காக காத்து இருக்க வேண்டும் என அறிவுரை கூறி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜுன் 18-22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஜுன் 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளனர். மேலும் இந்தப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.

இங்கிலாந்தில் தட்பவெப்ப நிலை மாறுபடும். இதனால் பந்து ஸ்விங் ஆகும் நிலை அதிகமாக இருக்கும். அதோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படு மோசமாக சொதப்பியது. அதுவும் 2 ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் போட்டி முடிந்ததும் கேப்டன் கோலி இந்தியா திரும்பினார். பின்பு ரஹானே தலைமையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. பின்னர் அகமதாப் மைதானத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. ஆனால் இந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டு இருந்தது என இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வருகிறனர். அதிலும் கேப்டன் விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பரில் வங்கத்தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதற்குப் பின்பு சதத்தைத் தொடக்கூட முயற்சிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விராட் கோலி கேப்டன்சி மற்றும் பேட்டிங் என இருமுனைகளில் போராடி வருவதாக கருத்து நிலவுகிறது.

ஏற்கனவே மும்முனை போட்டிகளுக்கும் ஒரே கேப்டன்சி என்ற அடிப்படையை மாற்றி டி20 போட்டிக்கு ரோஹித் சர்மாவை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஒருவேளை கோலி சொதப்பினால் மும்முனை கேப்டன்சிக்கு ஆபத்து வரலாம் எனக் கருத்து கூறப்படுகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அவர்கள் மிட்-டே பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலின் போது, கோலி அதீத அவசரம் காட்டக்கூடாது. அவர் இயல்பான வீரர்தான். ஆனால் பேட்டிங்கில் அவசரம் காட்டுவதால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். எனவே ஆதிக்கம் செலுத்துவதற்கான நேரத்துக்காக காத்து இருந்து நிதானமாக விளையாட வேண்டும்.

அதோடு இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலை வேறுமாதிரி இருக்கும். இதனால் பந்து அடிக்கடி ஸ்விங் ஆகும். சொந்த மண்ணில் இங்கிலாந்து வீரர்கள் கடினமாக இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்வதில் நிதானம் தேவை. அதிலும் முக்கியமாக வேகப்பந்துகளை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவுகள் மாறும். என்னை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இந்தியாவை விட இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று அதிர்ச்சியான தகவலையும் அவர் கூறியுள்ளார்.

'

More News

வலிமை பட நாயகியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை“ திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

கார்த்திக் நரேனின் 'நரகாசுரனுக்கு' நல்ல காலம் பிறந்துவிட்டதா?

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'துருவங்கள் 16' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'நரகாசுரன்'.

விஜய் மகனுக்கு ஜோடியா நடிக்கணும்: 17 வயது சீரியல் நடிகை பேட்டி!

வளர்ந்து வரும் நடிகைகளாக இருந்தாலும் சரி, அறிமுகமாகும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று தான் கனவுடன் திரையுலகிற்கு வருவார்கள்

வயசானாலும் அழகு மட்டும் குறையல… மூத்த நடிகையைப் பார்த்து உருகும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை 90 களில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

மாஸ்டர் பட நாயகி சின்ன வயதில் எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் “பேட்ட“ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.