ஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் ஒருபடிமேலே போய் முன்னாள் இந்தியக் கேப்டன் கபில் தேவ், 32 பந்துகளுக்கு 56 ரன்களை விளாசிய இஷானை பாராட்டி உள்ளார்.

மேலும் இஷான் கிஷனின் வரவால், இனி ஷிகர் தவானின் இடம் கேள்விக்குறிதான் என்றும் கிண்டலாக தெரிவித்து உள்ளார். அதோடு, டெஸ்ட் போட்டியிலும் இனி ஷிகர் உள்ளே வருவது கடினம். ஒருநாள் போட்டிகளிலும் கூட கஷ்டம்தான். இனி அவருக்கு என்ன இருக்கிறது. என்னுடன் கோல்ஃப் விளையாடலாம் என நகைச்சுவையாக கூறியுள்ளார். நேற்று ஸ்போர்ட் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கபில்தேவ் இந்தக் கருத்தகளை தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு ஷிகர் தவானைப் பொறுத்தவரையில் கேரியர் முடிந்து விட்டது என்றே கூறலாம் என்றும் கபில் தேவ் தெரிவித்து இருந்தார். சென்ற டி20 போட்டியில் ஷிகர் தவான் 12 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்த நிலையில் அவருக்கு அடுத்து இஷான் கிஷன் களம் இறக்கப்பட்டார். 4 ஹிட் பவுண்டரிகளுடன் 32 பந்துகளுக்கு 56 ரன்களை இஷான் விளாசி இருந்தது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் முதல் போட்டியில் இந்த சாதனையை செய்து இருப்பது பல முன்னணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில் ஷிகர் தவானை குறித்து கபில் தேவ் கூறிய கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் முன்னணி வீரராக இருந்து வரும் ஷிகர் தவான் இதுவரை 176 ஐபிஎல் போட்டிகளில் 5,974 ரன்களை குவித்து உள்ளார் அதோடு கடந்த 2015 உலகக்கோப்பை மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் தன்னுடைய பெரிய பங்களிப்பை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக சட்டமன்ற தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்

தேர்தல் துளிகள்: 16 மார்ச் 2021

பண்ருட்டி தொகுதி அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் தனக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நதியா: மேக்கப் போடும் வீடியோ வைரல்!

பாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நதியா அதன்பின்னர் 'மந்திரப்புன்னகை' 'உயிரே உனக்காக' 'நிலவே மலரே' 'அன்புள்ள அப்பா' 'ராஜாதி ராஜா'

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் சர்ச்சை காட்சி: நீக்கிய டிவி நிர்வாகம்!

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறு சர்ச்சை ஏற்பட்டுள்ளதை அடுத்து சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

கமல்ஹாசனின் சொத்துமதிப்பு எத்தனை கோடி? வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.