'கரகாட்டக்காரன்' புகழ் சண்முகசுந்தரம் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,August 15 2017]

பழம்பெரும் குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

கடந்த 1963ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த ரத்தத்திலகம்' படத்தில் அறிமுகமான சண்முகசுந்தரம் ஆரம்பகட்டத்தில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் குணசித்திர வேடத்தில் தனது வித்தியாசமான வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த சூப்பர் ஹிட் படமான 'கரகாட்டக்காரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு இன்றும் அனைவரின் நினைவிலும் இருக்கின்றது.

வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028' படத்தில் டாஸ் வென்ற அணியிடம் 'பீல்டிங்கா பெளலிங்கா' என்று இவர் கேட்கும் நகைச்சுவை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும் வகையில் இருக்கும். தமிழ்ப்படம், மாஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்த சண்முகசுந்தரம் நடித்த கடைசி படம் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மறைவிற்கு IndiaGlitz ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் அவருடை ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்கிறது.

More News

விவசாயிகளை காப்பாற்றுங்கள்: ஜி.வி.பிரகாஷின் சுதந்திரதின செய்தி

இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர்...

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியது ஏன்? சிம்பு விளக்கம்

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளார்...

ஓவியா ஆர்மியினர்களிடம் வசமாக சிக்கிய காயத்ரி

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை வேறு யாரும் இந்த ரியாலிட்டி ஷோவில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டதால் அவரை திட்டம் போட்டு கார்னர் செய்து வெளியேற்றினர்...

'மெர்சல்' ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ விழா என்றாலே அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதுதான். இருப்பினும் நேரம், இடம் கருதி ஆடியோ விழா நடைபெறும் இடத்தில் ஒருசில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்...

பேரன்பின் ஆதி ஊற்று : நா.முத்துக்குமார்

ஒரு பாடலாசியர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2016 ல் இறந்துவிடுகிறார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2017 வரை கிட்டத்தட்ட ஒரு வருடமாக....