close
Choose your channels

'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்!

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தில் ‘லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, ஸ்ட்ரெயிட்டா என்கிட்ட வச்சுக்காதே’ என ரஜினி பேசும் வசனம் ஒன்று வரும். இந்த வசனத்தை கூறி கராத்தே தியாகராஜன், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு சவால் விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கராத்தே தியாகராஜன், ‘தமிழகத்தில் சின்ன கருத்தை சொன்னால்கூட பெரிதாக பேசுகிறார்கள். திராவிட இயக்கத்தில் அங்கேயே 6 கோஷ்டி உள்ளது. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் முரசொலியில் எழுத வேண்டியதுதானே.

தர்பார் படத்தில் வருவது போல் ஸ்டாலின் அவர்களே ரஜினியிடம் லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, நேராக வைத்துக்கொண்டால் அரசியலில் தோற்றுவிடுவீர்கள். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்வதாக கூறுகிறீர்கள். ரஜினிகாந்த் சுயமாக பேசக்கூடியவர். 10 பேர், 20 பேர் போராட்டம் நடத்தி பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல என்றும் அவர் ஒரு நடிகர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 1996இல் சென்னை மேயராவதற்கு ரஜினிகாந்தின் புகைப்படத்தை இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்தினாரே. அது என்ன?

இவ்வாறு கராத்தே தியாகராஜன் பேசியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos