முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் இருந்து தனக்கு முழு விலக்கு வேண்டும் என்று கருணாஸ் எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை வந்தது. இந்த மனுவில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக காவல்நிலையத்தில் கையெழுத்தடுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இறுதியில் நாளை முதல் அதாவது அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய காவல்நிலையத்தில் கருணாஸ் எம்,எல்.ஏ கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.