close
Choose your channels

நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம்.. வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்..!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கருணாஸ் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாலா இயக்கிய ‘நந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பதும் தற்போதும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ் மனைவி கிரேஸ் ஒரு பின்னணி பாடகி என்பதும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கருணாஸ் - கிரேஸ் தம்பதிக்கு டயானா என்ற மகளும் பென் கருணாஸ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்பட ஒரு சில படங்களில் பென் கருணாஸ் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. டாக்டருக்கு படித்துள்ள டயானாவின் திருமண புகைப்படங்களை அவரது சகோதரர் பென் கருணாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து அக்கா மற்றும் மாமாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.