நடிகர் கருணாஸ் மகளுக்கு திருமணம்.. வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,February 06 2023]

நடிகர் கருணாஸ் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாலா இயக்கிய ‘நந்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பதும் தற்போதும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாஸ் மனைவி கிரேஸ் ஒரு பின்னணி பாடகி என்பதும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கருணாஸ் - கிரேஸ் தம்பதிக்கு டயானா என்ற மகளும் பென் கருணாஸ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்பட ஒரு சில படங்களில் பென் கருணாஸ் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. டாக்டருக்கு படித்துள்ள டயானாவின் திருமண புகைப்படங்களை அவரது சகோதரர் பென் கருணாஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து அக்கா மற்றும் மாமாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

More News

நாளை திருமணம் என்ற நிலையில் திடீர் டுவிஸ்ட்.. ஷங்கர் பட நடிகையின் திருமண தேதி மாற்றம்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்துவரும் நடிகையின் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது திடீரென திருமண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

'வாரிசு' படத்தை அடுத்து இளம் ஹீரோவின் அடுத்த படத்தின் சரத்குமார்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் நடித்த சரத்குமார் அடுத்ததாக இளம் ஹீரோ ஒருவரது படத்தில் இணைந்துள்ளதாக இன்று அறியாத அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ஏகே 62' படத்திற்கு இரண்டு இயக்குனர்களா? வேற லெவல் திரைக்கதை என தகவல்

அஜித் நடிக்க உள்ள 'ஏகே 6' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தைப்பூச நாளில் ரவீந்திரன் - மகாலட்சுமி முருகனிடம் வேண்டியது என்ன? வைரல் புகைப்படங்கள்..!

 பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன், சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் சமீபத்தில் நடந்த திருமணங்களிலேயே இந்த திருமணம் தான் சமூக

ஷாலினி அஜித் எடுத்த மாஸ் புகைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி..!

 ஷாலினி அஜீத் எடுத்த அஜித்தின் மாஸ் புகைப்படங்கள் ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.