நடிகர் அர்ஜூன் கைது குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,November 03 2018]

ஆக்சன் கிங் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் தொல்லை குறித்த வழக்கில் அர்ஜூனை நவம்பர் 14-ந் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் அர்ஜூன் மீதான புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு தடை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவதூறு செய்வது, மிரட்டல், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் நடப்பது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.