விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் மனிதாபிமானமின்றி புகைப்படம் எடுத்த பொதுமக்கள்.

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் போலீஸ், கோர்ட் என்று அலைய வேண்டிய நிலை வரும் என்றுதான் பலர் அதில் ஈடுபடுவதில்லை. இதற்காகத்தான் சுப்ரீம் கோர்ட்டே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் நடைமுறையில் ஒரு விபத்து நடந்தால் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற இன்னும் பலர் முன்வருவதில்லை.

ஆனால் அதே நேரத்தில் விபத்து நடந்தால் அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி மொபைல் போனில் படமெடுத்து ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பதிவு செய்து லைக் வாங்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. நேற்று காலை கர்நாடகத்தின் கொப்பல் என்ற பகுதியில் அன்வர் அலி எகலாஸ்புர் என்ற 18 வயது இளைஞர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேருந்து ஒன்று மோதியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிய அன்வரை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு, ரத்தத்துடன் கூடிய புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இறுதியில் ஆம்புலன்ஸ் வந்து அன்வரை மருத்துவமனையில் சேர்க்கும் முன் ஏராளமான ரத்தம் உடலில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் சமூக வலைத்தள லைக்குகளுக்காக மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டவர்களுக்கு அதே சமூக வலைத்தளங்களில் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

More News

'விவேகம்' டைட்டிலில் மொபைல் நம்பரா?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது...

காதலியை தீ வைத்து, தானும் தீக்குளித்த கல்லூரி மாணவன்

கேரளாவில் காதலியை கல்லூரி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தானும் தீக்குளித்து மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பெண்ட். விஷால் எடுத்த அதிரடி முடிவு

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சங்க செயலாளர் விஷாலை தயாரிப்பாளர் சங்கம் சஸ்பெண்ட் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சஸ்பெண்டை எதிர்த்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...

மோகன்லால்-விஷால் படத்தில் இணையும் பிரபல நடிகை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ள படம் ஒன்றை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன...

எனது பெயரில் அஜித் படத்தலைப்பு. பிரபல பாடலாசிரியர்

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிட்னெஸ் உடலமைப்பு, அட்டகாசமான பின்னணியை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்...