'சர்தார்' படத்தில் கார்த்தியின் கேரக்டர்: ஆச்சரியமான தகவல்!

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது என்று பார்த்தோம். ’சர்தார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் கார்த்தி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருந்த கார்த்தி மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும், அதில் ஒரு வேடம் போலீஸ் கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் இந்த படத்தின் கதையை ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் என்று இயக்குனர் பிஎஸ் மித்ரன் தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் என்ற நிலையில் அவர் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்றும், இதனை அடுத்து மைசூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

குடும்பத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அஸ்வின்: அதிர்ச்சி தகவல்!

குடும்பம் தான் முக்கியம் என்ற காரணத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலக தமிழக வீரர் அஸ்வின் எடுத்த முடிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர், இயக்குனர் யார்?

2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கர் விருதுகள் குறித்த விபரங்கள் இதோ:

'தளபதி 65' நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா: படப்பிடிப்பு தள்ளிப்போகுமா?

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 65'.  அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு

எங்கள் வீட்டின் ஆலமரம் சரிந்தது: இயக்குனர் அட்லியின் சோக டுவிட்!

தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்த சோகம் குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும்

கார்த்தியின் அடுத்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸ்

நடிகர் கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.