'காற்று வெளியிடை' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை ஆஸ்கார் நாயகனும், இந்த படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.

ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலருக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி, அதிதிராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'விஜய் 61' படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்குமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் தடைகள் பலவற்றை தகர்த்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாள் முன்னதாகவே அதாவது மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

விவசாயிகளின் வீட்டுக்கு சென்று ரூ.1 கோடி பணம் கொடுப்பேன். ராகவா லாரன்ஸ்

தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றும் கர்நாடகம் ஒருபுறம், இருக்கும் நீரை வழிமறிக்கும் கேரளா ஒரு புறம், இதெல்லாம் போதாதென்று குடிநீருக்கே கஷ்டப்படும் அளவுக்கு பொய்த்துவிட்ட மழை ஒருபுறம் என்று பல விவசாயிகளை தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு செ

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' சென்சார் தகவல்கள்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் பிரபு நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்ரியன்'.

இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சூர்யா

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா, நடிப்பு மட்டுமின்றி 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த '36 வயதினிலே', 'பசங்க 2' ஆகிய இரண்டு தரமான படங்களாகவும், '24' திரைப்படம் மாஸ் படமாகவும் அமைந்தது...