close
Choose your channels

அதிதியிடம் தோல்வி அடைந்த கார்த்தி: வைரல் வீடியோ

Wednesday, August 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, அதிதிஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என்பதும் இதில் கிராமத்து விளையாட்டுகள் விளையாப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கபடி உள்பட பல கிராமத்து விளையாட்டுகள் விளையாடிய நிலையில் கார்த்தி மற்றும் அதிதிஷங்கர் மோதும் விளையாட்டும் நடந்தது. இதில் கார்த்தியை அதிதிஷங்கர் வென்றுவிட்டதாக நடுவர் கூறியதை அடுத்து அதிதி சங்கர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து கார்த்தி பேசும்போது இது போன்ற விளையாட்டுக்களை விளையாடி நீண்ட நாட்களாகி விட்டது என்றும் அதிதியிடம் தோல்வி அடைந்தது எனக்கு சந்தோசம்தான் என்றும் தெரிவித்துள்ளார். ‘விருமன்’ படக்குழு ஒரு குடும்பம் போன்றது என்றும், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லதுதான் என்றும் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.