close
Choose your channels

சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாகவும் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை சூர்யா வெளியிடவிருப்பதாகவும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ஜோதிகா நடித்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சூர்யா வெளியிடுவதால் மூவரும் இணைந்த முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது.

ஏற்கனவே இந்த படத்திற்கு ‘தம்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் அது உண்மைதானா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்

கார்த்தி, ஜோதிகா, ஆகியோர்களின் தந்தை கேரக்டரில் சத்யராஜ் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளர் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.