'சர்தார் 2' படத்தின் கதை இதுவா? தற்போதைய சென்சிட்டிவ் விஷயத்தை கையில் எடுக்கும் பிஎஸ் மித்ரன்..!

  • IndiaGlitz, [Sunday,April 21 2024]

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தின் கதையின் படி மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் பாட்டில் வாட்டர் மற்றும் கேன் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் கோடிக்கணக்கான வணிக அரசியல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டு இருந்தது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பல மினரல் வாட்டர் குடிப்பதற்கு தயங்கும் அளவுக்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் தண்ணீர் விவகாரம் குறித்த கதையை ஆழமாக கூறிய பிஎஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தில் போதை விவகாரம் குறித்த பின்னணியை சொல்ல இருக்கிறாராம். கடந்த சில வாரங்களாகவே போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டதும், அவருக்கும் திரையுலகில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பிஎஸ் மித்ரன் தற்போதைய சென்சிட்டிவான விஷயத்தை கையில் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

கைவிரலில் மட்டுமல்ல.. இன்னொரு முக்கிய இடத்திலும் காயம்.. 'கோட்' படப்பிடிப்பில் விஜய்க்கு என்ன ஆச்சு?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதாகவும் அதில் விஜய்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில்

'மாஸ்கோ'வுக்கு ஒரு முக்கிய கேரக்டர் .. 'கோட்' குறித்து ரஷ்ய ஊடகத்திற்கு வெங்கட் பிரபு பேட்டி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார் என்றும் அவர்

சின்ன வயதில் மகன் செய்த சாதனை.. மகிழ்ச்சியுடன் வாழ்த்திய நடிகர் சூர்யா..!

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் இந்த சின்ன வயதில் செய்த சாதனையை எடுத்து தனது மகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 2 கமல்ஹாசன் படங்கள்.. 2 வருடங்களுக்கு பின் தரமான சம்பவம்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

'கேப்டன் மில்லர்' 'அயலான்' முதல் நாள் வசூலை நெருங்கிய 'கில்லி'.. ரீரிலீசில் சாதனை..!

தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான 'கில்லி' திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 20 ஆண்டுகளுக்கு