'ஹேய்.. கர்மான்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? கார்த்தியின் 'ஜப்பான்' பட வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக கூறி வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கார்த்தி முதலில் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை செய்யும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக ’ஹேய்.. கர்மான்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? என்று கார்த்தி பேசும் வசனம் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கும் இந்த படத்தில் சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

More News

இரண்டு விதமான 'லியோ' ரிலீஸ்.. புதிய அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்: மறக்க முடியாத பரிசளித்த பா ரஞ்சித்..!

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று காலை நடந்த நிலையில் சற்று முன் இருவரும் இணைந்து நடித்த படத்தின் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சொந்த வாழ்க்கையை வெப்தொடரை தயாரித்து இயக்கும் கவர்ச்சி நடிகை.. டைட்டில் இதுதான்..!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை தனது சொந்த வாழ்க்கையை வெப்தொடராக தயாரித்து, இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

முதல் வாரத்திலேயே வெளியேறிய கவர்ச்சிப்புயல் நடிகை .. சிகரெட் ஊதிய ஷகிலா.. என்ன நடக்குது பிக்பாஸ் தெலுங்கில்?

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் பல நாட்கள் நீடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவர்ச்சி புயல் நடிகை முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி

ஸ்டார்ட் பண்ண இதுதான் சரியான நேரம்.. நயனின் மறைமுக மெசேஜ் என்னவாக இருக்கும்?

நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விரைவில் ஒரு  புதிய அறிவிப்பை வெளியிட போவதாக