அரசு பேருந்தில்தான் கல்லூரி காலத்தை கழித்தேன்… முன்னணி நடிகர் பதிவிட்ட வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,February 10 2021]

நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி காலத்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் பழைய அரசு பேருந்தான பல்லவன் பேருந்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய நண்பர்களுடன் அமர்ந்து இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் ஆரம்பக் காலத்தில் பல்லவன் என்ற பெயரில்தான் இயங்கியது. இந்தப் பேருந்தில் தன்னுடைய கல்லூரி நாட்களை கழித்ததாகக் கூறியுள்ள நடிகர் கார்த்திக், அந்த நாட்கள் உண்மையான நட்புகளுடன் இனிமையாக கழிந்தது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்திக் முதன் முதலாக தமிழில “பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூபபர் ஹிட் அடித்த நிலையில் தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “கைதி“ படமும் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. தற்போது “ரெமோ“ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “சுல்தான்” வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் இளம் நடிகை ராஷ்மிகா தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி கால புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். பிஎஸ்பிபி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை கிரசென்ட் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார் என்பதும் பின்னர் மேல்படிப்புக்காக அவர் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஆயுதஎழுத்து“ படத்தில் உதவியாளராக பணியாற்றினார் என்பதும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் “பொனனியின் செல்வன்“ படத்தின் முக்கிய வேடமான வந்தியதேவன் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்த படம் என்னை நிச்சயம் ஸ்டார் ஆக்கும்: எஸ்.ஜே.சூர்யா பேட்டி

எஸ்ஜே சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடி பதில் தந்த லாஸ்லியா!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின்போது கவினை காதலிப்பதாக கூறிய நிலையில் தற்போது கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடியான பதிலை தெரிவித்துள்ளது

இன்னும் நிறைய சஸ்பென்ஸ் காத்திருக்கு: 'த்ரிஷயம் 2' குறித்து மோகன்லால்!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'த்ரிஷ்யம்'. இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல்வேறு தென்னிந்திய

சனம்ஷெட்டியை மனதார பாராட்டிய தர்ஷன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷன், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சனம்ஷெட்டி ஆகிய இருவர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில்

நயன்தாரா படத்திற்கு பாராட்டுக்களை குவித்த நடிகர் கார்த்தி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சர்வதேச டைகர் விருது கிடைத்துள்ள நிலையில்